மேலும் செய்திகள்
பெரியார் நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ள பெருக்கு
22-Oct-2025
கச்சிராயபாளையம்: மின்மாற்றிகளில் காப்பர் கம்பிகளை திருடிய ௩ பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். கல்வராயன்மலையில் உள்ள மணியார்பாளையம் மற்றும் நொச்சிமேடு கிராமத்தில் உள்ள மின்மாற்றிகளில் இருந்த காப்பர் கம்பிகளை கடந்த 2 மாதங்களுக்கும் முன்பு மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதே போல் கச்சிராயபாளையம் அடுத்த கடத்துார் மற்றும் வெங்கட்டாம்பேட்டை பகுதியில் இருந்த இரண்டு மின்மாற்றிகளிலும் காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து கரியாலுார் மற்றும் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். போலீசார் விசாரணையில் சேலம் மாவட்டம், கல்வராயன்மலை கும்பாபாடி கிராமத்தை சேர்ந்த சின்னாண்டி மகன் சரத்குமார் 26, வலக்காப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் பிரகாஷ் 24, தொரடிப்பட்டு கிராமத்தை சேர்ந்த திருமலை மகன் லட்சுமணன் 33, ஆகிய மூன்று பேரை கரியாலுார் போலீசார் சந்தேகத்தின் பேரில் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் கல்வராயன் மலை மற்றும் கச்சிராயபாளையம் பகுதிகளில் மின்மாற்றிகளில் காப்பர் கம்பிகளை திருடி சென்றதை ஒப்புக்கொண்டனர். மூன்று பேரையும் கரியலுார் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
22-Oct-2025