உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மூங்கில்துறைப்பட்டில் மழையால் 3 வீடுகள் சேதம்

மூங்கில்துறைப்பட்டில் மழையால் 3 வீடுகள் சேதம்

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு பகுதியில் மழையால் 3 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ராவத்தநல்லுாரில் ராஜாமணி மனைவி மலர் என்பவரின் கூரை வீடும், ராவத்தநல்லுார் எல்லையில் உள்ள புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த அய்யம்பெருமாள் மகன் செல்வம் வீடு, கானாங்காடு கிராமத்தில் ரஜினி மனைவி சுதா வீடு மழையில் இடிந்து சேதமானது. இது குறித்து தகவல் அறிந்த வடபொன்பரப்பி வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை