மேலும் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
12-Dec-2024
திருக்கோவிலூர்: திருக்கோவிலுார் மற்றும் சின்னசேலம் பகுதியில் குட்கா விற்றது தொடர்பாக பெண் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர். . அரகண்டநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் குருபரன் மற்றும் போலீசார் நேற்று காலை தபோவனம் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே பையுடன் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். பையில், விமல், ஹான்ஸ் உள்ளிட்ட ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 2,000 பாக்கெட் புகையிலை பொருட்கள் இருந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம், குச்சிபாளையம் ரகோத்தமன் மகன் ஆனந்தன்,42; என்பதும், விற்பனைக்கு கொண்டு செல்வது தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, ஆனந்தனை கைது செய்தனர். சின்னசேலம்
சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது, வரதப்பனுார் கிராமத்தில் உள்ள மளிகை கடையில் ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். மேலும், அவருக்கு குட்கா பொருட்களை சப்ளை செய்த செம்பரம்பட்டு கிராமத்தை சேர்ந்த மூர்த்தி மனைவி சந்திரலேகா,32; என்பவரையம் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 3 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
12-Dec-2024