உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சியில் 3ம் ஆண்டு சிலம்ப போட்டி

கள்ளக்குறிச்சியில் 3ம் ஆண்டு சிலம்ப போட்டி

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்ட சிலம்பம் சங்கம் சார்பில் மூன்றாமாண்டு சிலம்ப போட்டி நடந்தது.கள்ளக்குறிச்சியில் நடந்த போட்டிக்கு, மாவட்ட சிலம்பம் சங்கம் செயளாலர் ஜெயபால் தலைமை தாங்கினார். இணை செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். 10, 14, 18 மற்றும் 35 வயது என நான்கு பிரிவுகளில், குத்து வரிசை, ஒற்றை கம்பு வீச்சு, அலங்கார கம்பு வீச்சு, வேல் கம்பு வீச்சு, ஒற்றை வாள் வீச்சு, ஒற்றை சுருள் வாள் வீச்சு, மான் கொம்பு வீச்சு உட்பட 13 வகைகளாக போட்டி நடந்தது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிலம்ப கலைக்கூடம் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் என 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், சங்க தலைவர் கலைவேந்தன், இணை செயளாலர் ராம்குமார், பெண் காவலர் செண்பகவள்ளி உள்ளிட்டோர் உடனிருந்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், மெடல் ஆகியவை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை