உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கஞ்சா விற்ற 5 பேர் கைது 2.100 கிலோ பறிமுதல்

கஞ்சா விற்ற 5 பேர் கைது 2.100 கிலோ பறிமுதல்

தியாகதுருகம்,: தியாகதுருகத்தில் கஞ்சா விற்றது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து 2.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் மலர்விழி நேற்று முன்தினம் பழனியப்பா தெருவில் சோதனை மேற்கொண்டார். அப்போது, அப்பகுதியில் குமார், 41; என்பவர் வீட்டில் விற்பனைக்காக 2.100 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.அவரிடம் நடத்திய விசாரணையில், தியாகதுருகம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த ரவி, 50; நல்லான்குளத்தெரு ஏழுமலை மகன் சீனிவாசன், 23; நரிக்குறவர் காலனி சங்கர் மகன் வல்லரசு, பாப்பாங்குளத்தெரு முகமது ரபீக் மகன் முகமது ஷாகில், 23; ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. உடன், வழக்குப் பதிந்த போலீசார், 5 பேரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை