குட்கா விற்ற 5 பேர் கைது
சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே குட்கா பொருட்கள் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர்கள் லோகேஸ்வரன், கோவிந்தன் மற்றும் போலீசார், பூட்டை கிராமத்தில் உள்ள பெட்டிக் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, விக்னேஷ், 22; என்பவர் பெட்டிக்கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரிந்தது. இதனையடுத்து அவரிடம் விசாரித்ததில், செங்கம் பகுதியைச் சேர்ந்த புன்னியகோடி, 40; மேல்சிறுவளூர் கார்த்திக், 29; பொருவளூர் அருணாசலம், 28; பூட்டை அழகுமணி, 34; ஆகியோரிடமிருந்து வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது.இதனையடுத்து விக்னேஷ் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 175 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.