உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குட்கா விற்ற 5 பேர் கைது

குட்கா விற்ற 5 பேர் கைது

சங்கராபுரம்: குட்கா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர்கள் தனசேகரன், பிரதாப்குமார் ஆகியோர் நேற்று பெட்டி கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை செய்தனர். அப்போது, விரியூரை சேர்ந்த ராயப்பன் மகன் தங்கபிரகாசம்,41; ஆரோக்கியதாஸ் மகன் ராஜா,43; இளையாங்கன்னியை சேர்ந்த அந்தோணி மகன் சத்தியநாதன்,40; புதுப்பட்டை சேர்ந்த கோவிந்தசாமி மகன் ஏழுமலை,40; எஸ்.குளத்துார் நாராயணன் மகன் பாலசுப்ரமணியன்,59; ஆகியோர் குட்கா விற்றது தெரிந்தது. தொடர்ந்து, 5 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 44 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள், ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை