உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நகர வங்கி லாபத்தில் 5 சதவீதம் கூட்டுறவு ஒன்றியத்திற்கு வழங்கல்

நகர வங்கி லாபத்தில் 5 சதவீதம் கூட்டுறவு ஒன்றியத்திற்கு வழங்கல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மண்டல இணைப்பதிவாளரிடம், கூட்டுறவு நகர வங்கியின் மொத்த லாப தொகையில் 5 சதவீத தொகைக்கான காசோலை நேற்று வழங்கப்பட்டது.கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். திருக்கோவிலுார் கூட்டுறவு நகர வங்கி கடந்த 2023-24ம் ஆண்டில், 80 லட்சத்து 57 ஆயிரத்து 341 ரூபாய் லாபத்தை பெற்றது. லாப தொகையில், கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதிக்கு 3 சதவீதம், கல்வி நிதிக்கு 2 சதவீதம் என மொத்தம் 5 சதவீத தொகையை கூட்டுறவு ஒன்றியத்திற்கு தர வேண்டும்.அதன்படி, மொத்த லாப தொகையில் 5 சதவீத தொகை 4 லட்சத்து 2,867 ரூபாய்க்கான காசோலை நேற்று வழங்கப்பட்டது.திருக்கோவிலுார் கூட்டுறவு நகர வங்கியின் துணைப்பதிவாளர் விஜயகுமாரி காசோலையை மண்டல இணைப்பதிவாளர் முருகேசனிடம் வழங்கினார். அப்போது, திருக்கோவிலுார் சரக துணைப்பதிவாளர் குறிஞ்சி மணவாளன், வங்கி பொது மேலாளர் பிரபாகரன், உதவி பொது மேலாளர் ஜோதி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய கூட்டுறவு சார் பதிவாளர் நிர்மல் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ