மேலும் செய்திகள்
கல்வராயன்மலை பகுதியில் சாராயம், வெல்லம் பறிமுதல்
02-Sep-2025
கள்ளக்குறிச்சி: கரியாலுாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தனிப்பிரிவு ஏட்டு தங்கியிருந்த குடியிருப்பில் இருந்த குட்கா, சாராயம் மற்றும் நாட்டு துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் குழாய்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியாலுார் போலீஸ் நிலைய தனிப்பிரிவு ஏட்டு பிரபு. இவர் கடந்த சில தினங்களுக்கு முன் போக்சோ வழக்கில் கைதாகி, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் பிரபு தங்கியிருந்த கரியாலுார் காவலர் குடியிருப்பில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்கு, 448 பாக்கெட் ஹான்ஸ், 3,070 பாக்கெட் விமல் பாக்கு, 2,880 வி 1 டுபாக்கோ பாக்கெட் உள்ளிட்ட குட்கா பொருட்கள் இருந்தது. 66 மதுபாட்டில்கள், 10 லிட்டர் சாராயம், நாட்டு துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் 7 இரும்பு குழாய்கள், 3 கத்தி, பைக் இருந்தது. அனைத்து பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, கரியாலுார் சப்இன்ஸ்பெக்டர் குணசேகரன் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பாக பிரபு மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.
02-Sep-2025