உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தெரு நாய் கடித்து கன்றுகுட்டி பலி

தெரு நாய் கடித்து கன்றுகுட்டி பலி

ரிஷிவந்தியம்; பாவந்துாரில் தெரு நாய்கள் கடித்ததில் காயமடைந்த கன்று குட்டி இறந்தது.ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி, 50; விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு அருகே பசு மாடுகள் மற்றும் கன்றுவையும் கட்டியிருந்தார்.அதிகாலை 2:30 மணியளவில் மாடுகளின் சத்தத்தை கேட்டு பழனி எழுந்து வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தார். அப்போது, வீட்டிற்கு அருகே கட்டப்பட்டிருந்த கன்று குட்டியை தெருநாய்கள் கடித்து குதறியதில் கன்று குட்டி இறந்து கிடந்தது தெரியவந்தது.பாவந்துாரில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ