மேலும் செய்திகள்
ரோட்டரி சங்க முப்பெரும் விழா
26-Sep-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம் சார்பில் விவசாயிகளை கவுரவிக்கும் விழா நடந்தது. கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்க நுாற்றாண்டு மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ரோட்டரி மாவட்ட ஆளுநர் சிவசுந்தரம், சிக்னேச்சர் ப்ராஜெக்ட் சேர்மன் ரேவதி, ஆளுநர் தேர்வு செந்தில்குமார் தலைமை தாங்கினர். ரோட்டரி துணை ஆளுநர் மூர்த்தி முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்க தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். செயலாளர் பிரகாஷ் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் 107 விவசாயிகளுக்கு சால்வை அணிவித்து, அனைவருக்கும் ஸ்பிரேயர், விதை நெல் வழங்க கவுரவிக்கப்பட்டனர். முன்னாள் தலைவர்கள் ஞானராஜ், டாக்டர் சங்கர் ராமலிங்கம், துவாரகா, சசிகுமார் மற்றும் உறுப்பினர்கள் கோவிந்தன், உதயகுமார், ராஜா, சுப்பிரமணியன், வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் முருகன் நன்றி கூறினார்.
26-Sep-2025