புதிய மாற்றம் ஏற்படுத்தப்படும்
கடந்த ஜூலை மாதம் பதவி உயர்வு மூலம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பொறுப்பேற்று பணிபுரிந்து வருகிறேன். புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று ஆசிரியர்களும், மாணவர்களும் எதிர்பார்த்து உள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் மாற்றத்தை ஏற்படுத்தி மாணவர்களுக்கு ஊக்கத்தையும், வாழ்க்கை முன்னேற்றத்தையும் ஏற்படுத்தி தருவதற்கு உறுதியாக இருப்பேன். பள்ளிக்கு தேவையான வசதிகளை பலர் முன்வந்து செய்து வருகின்றனர். பள்ளி வளர்ச்சியடைய ஆசிரியர்களின் துணை கொண்டு முன்னெடுத்து செல்வேன். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி உயர் கல்வி பெற்று நல்ல வேலை வாய்ப்புகளை பெறுவதற்கு வழியை ஏற்படுத்தி தருவேன். லட்சுமி கார்த்திகாயாயினி, தலைமை ஆசிரியர், உளுந்துார்பேட்டை.