உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கடன்சுமையால் ஒருவர் துாக்கிட்டு தற்கொலை

கடன்சுமையால் ஒருவர் துாக்கிட்டு தற்கொலை

கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே கடன்சுமையால் ஒருவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். வரஞ்சரம் அடுத்த கண்டாச்சிமங்கலத்தை சேர்ந்தவர் நல்லதம்பி மகன் அண்ணாதுரை,50; இவர் அதிகளவு கடன் சுமை இருந்ததால் மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில் இன்று (நவ.,17) காலை 7.30 மணியளவில் அண்ணாதுரை தனது வீட்டில் துாக்கிட்டு கொண்டார். இதில் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அண்ணாதுரையை மீட்டு பரிசோதனை செய்ததில் இறந்தது தெரிந்தது. தகவலறிந்த வரஞ்சரம் போலீசார் அண்ணாதுரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை