மேலும் செய்திகள்
தீ விபத்தில் 3 ஏக்கர் கரும்பு கருகி சேதம்
21-Oct-2024
மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அடுத்த கானாங்காட்டில் கூரை வீடு எரிந்து சேதமானது.மூங்கில்துறைப்பட்டு அடுத்த கானாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கிளாராமேரி, 55; கூலித் தொழிலாளி. இவர், நேற்று காலை கூரை வீட்டை பூட்டிவிட்டு கூலி வேலைக்குச் சென்றிருந்தார்.மாலை அவரது வீடு திடீரென தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்தினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் முழுதும் எரிந்து சேதமானது.வடபொன்பரப்பி போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
21-Oct-2024