அம்மன் கோவிலில் ஆடிவெள்ளி பூஜைகள்
சங்கராபுரம்; சங்கராபுரம் பகுதி அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் ஏரிக்கரை துர்க்கை அம்மன் கோவிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்த அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதேபோல் பூட்டை மாரியம்மன் கோவில், பாலமேடு புற்று மாரியம்மன் கோவில், சார் பதிவாளர் அலுவலகம் அருகே உள்ள புற்று மாரியம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.