உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாலையோரப் பகுதியில் மண் கொட்டி சமன்படுத்த நடவடிக்கை தேவை

சாலையோரப் பகுதியில் மண் கொட்டி சமன்படுத்த நடவடிக்கை தேவை

கள்ளக்குறிச்சி; பெருவங்கூரில் புதிதாக போடப்பட்ட தார் சாலையின் ஓரப்பகுதியில் மண் கொட்டி சமன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சூளாங்குறிச்சி, தண்டலை, வேளானந்தல் உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பைக், கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் பெருவங்கூர் வழியாக கள்ளக்குறிச்சிக்கு செல்கின்றனர். அதிகளவு கனரக வாகனங்கள் சென்றதால் பெருவங்கூர் ஏரிக்கரையில் மண் அழுத்தம் ஏற்பட்டு, பல்வேறு இடங்களில் மேடு, பள்ளங்களாக மாறியது. இதனால் கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் பெருவங்கூர் ஏரிக்கரை மீது செல்லும் போது மெதுவாக சென்றன. குறிப்பாக அதிக லோடுகளை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் அப்பகுதியில் மடிந்து சாய்ந்து விபத்து ஏற்படும் அபாயம் இருந்ததால் கடந்த சில தினங்களுக்கு முன் பெருவங்கூர் ஏரிக்கரை பகுதியில் மட்டும் புதிதாக தார் போடப்பட்டு, சாலை சமன்படுத்தப்பட்டது. ஆனால், சாலையின் ஓரப்பகுதியில் மண் கொட்டவில்லை. இதனால், எதிர்திசையில் வரும் வாகனங்களுக்கு வழிவிடும் போது, சாலை ஓரத்தில் வாகனத்தின் டயர் சிக்குகிறது. குறிப்பாக, பைக்கில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, பெருவங்கூர் ஏரிக்கரை பகுதியில் சாலை ஓரத்தில் மண் கொட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ