பழுதடைந்துள்ள மின்கம்பம் சீரமைக்க நடவடிக்கை தேவை
கள்ளக்குறிச்சி; சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் உடைந்து விழும் நிலையில் மின் கம்பத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அண்ணா நகர் முதல் தெரு மற்றும் சேலம் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் உள்ள மின் கம்பம் அடிப்பகுதி முழுவதும் பழுதடைந்து, உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. அதிகளவு மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து உள்ள இப்பகுதியில் விபத்து அபாயத்துடன் உள்ள மின் கம்பத்தை மாற்றிட வேண்டும் மின்துறை அதிகாரிகள் நடவடிக்கைஎ்டுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.