மேலும் செய்திகள்
காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்த எம்.எல்.,ஏ.,
22-Sep-2026
கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி அடுத்த குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் துவக்க விழா நடந்தது. தலைமை ஆசிரியர் மணிமாறன் தலைமை தாங்கினார். பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் ஆனந்தஜோதி, ஹெலன்ஜெயா முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியர் அனந்தகிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் அருள்விக்னேஷ் எம்.எல்.ஏ., துவக்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். ஊராட்சி தலைவர் அனு செல்லப்பிள்ளை, துணைத் தலைவர் சகுந்தலா பழனிசாமி, த.வெ.க., ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், இணைச் செயலாளர் விஜய், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் பூவாய் சக்திவேல், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அறிவழகன், மகாராஜன், சேகர், சுந்தரம், ராஜா, ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
22-Sep-2026