மேலும் செய்திகள்
அ.தி.மு.க.,வினர் மனித சங்கிலி போராட்டம்
09-Oct-2024
சின்னசேலம் : சின்னசேலத்தில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.கிழக்கு ஒன்றியம், சின்னசேலம் பேரூராட்சி சார்பில் நடந்த கூட்டத்திற்கு, கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், சின்னசேலம் பேரூராட்சி அம்பாயிரம் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் குமரகுரு, முன்னாள் அமைச்சர்கள் மோகன், சிவபதி, செந்தில்குமார், எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர்.சின்னசேலம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அணி செயலாளர் பிரபு, முன்னாள் அமைச்சர் சிவபதிக்கு வெள்ளி வேல் பரிசாக வழங்கினார்.கூட்டத்தில், கட்சி ஒற்றுமைக்காக அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும். வரும் தேர்தலில் முழுமையாக வெற்றி பெற தீவிரமாக உழைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னாள் எம்.பி., காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அழகுவேல் பாபு, பிரபு, மாவட்ட அவைத்தலைவர் பச்சையாப்பிள்ளை, ஜெ., பேரவைச் செயலாளர் ஞானவேல், பாசறை செயலாளர் வினோத், மாணவரணி பாக்யராஜ், எம்.ஜி.ஆர்., மன்ற தங்கபாண்டியன், வழக்கறிஞரணி சீனிவாசன், சிறுபான்மை பிரிவு ஜான்பாஷா உட்பட பலர் பங்கேற்றனர்.சின்னசேலம் பேரூராட்சி துணை சேர்மன் ராகேஷ் நன்றி கூறினார்.
09-Oct-2024