உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அ.தி.மு.க., பொதுக் கூட்டம்

அ.தி.மு.க., பொதுக் கூட்டம்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் தொகுதி அ.தி.மு.க., சார்பில், அரகண்டநல்லுாரில் அண்ணாதுரை பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பழனிசாமி வரவேற்றார்.அரகண்டநல்லுார் நகர செயலாளர் ராஜ்குமார் துவக்க உரையாற்றினார். மாவட்ட மாணவர் அணி செயலாளர் பாக்யராஜ், ஒன்றிய செயலாளர்கள் இளங்கோவன், தனபால்ராஜ், பழனி, சேகர், சந்தோஷ், ராமலிங்கம், ஏகாம்பரம், நகர செயலாளர்கள் சுப்பு, ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர்.தலைமைக் கழக பேச்சாளர் தென்றல் விஜய் சிறப்புரையாற்றினர். மாவட்ட இணை செயலாளர் ரங்கநாதன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சீனிவாசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு விழுப்புரம் மண்டல துணைச் செயலாளர் உமாசங்கர், முன்னாள் நகர செயலாளர் இளவரசன், மாவட்ட மாணவரணி தலைவர் பார்த்திபன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பாலமுரளி, எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் தங்கராஜ், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் சுபாஷ், ஆதன் ரவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ