வேளாண் காடுகள் விழிப்புணர்வு முகாம்
தியாகதுருகம்: தியாகதுருகத்தில், வேளாண் காடுகள் திறன் மேம்பாட்டு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. வேளாண் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், உதவி இயக்குனர் ரகுராமன் தலைமை தாங்கினார். அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சூர்யா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரவி, கலைவாணன் முன்னிலை வகித்தனர். வேளாண், வனத்துறை திட்டங்கள், மரங்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. நவீன முறையில் மரக்கன்றுகளை வளர்க்க பயிற்சி அளிக்கப்பட்டதுபெரம்பலூர் தனலட்சுமி வேளாண் கல்லூரி மாணவர்கள், மரக்கன்றுகளை நட்டனர். உதவி வேளாண் அலுவலர்கள் சந்திரமோகன், இளையராஜா பங்கேற்றனர்.