உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க., பிரசாரம்

திருக்கோவிலுார்; கள்ளக்குறிச்சி மாவட்ட ஜெ., பேரவை சார்பில் திருப்பாலபந்தலில் ஜெ., ஆட்சியின் சாதனைகள் குறித்த திண்ணை பிரசார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மறைந்த முதல்வர் ஜெ., ஆட்சி காலத்தில் அரசின் பல்வேறு துறைகளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் மற்றும் பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகள் குறித்து மக்களிடம் விளக்கும் வகையில், திருப்பாலபந்தலில் திண்ணை பிரசார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கினார். திருக்கோவிலுார் மத்திய ஒன்றிய பேரவை செயலாளர் முருகன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் சேகர், சந்தோஷ், பழனி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி ஒன்றிய கவுன்சிலர் பாண்டியன் முன்னிலை வகித்தனர்.செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு, எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணைச் செயலாளர் விநாயகமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ