| ADDED : டிச 23, 2025 07:21 AM
க ள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி (தனி), சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அடுத்தாண்டு ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாத துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் வெற்றி பெற்று, மாவட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்ற போட்டி தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., வினரி டையே எழுந்துள்ளது. தி.மு.க., வில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் அனைவரும் 'சீட்' பெற வேண்டி மாவட்ட செயலாளர்களிடம் காய் நகர்த்தி வருகின்றனர். அதேபோல், தேர்தலில் போட்டியிட விரும்புவோர் டிச., 15 முதல் 23ம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் என அ.தி.மு.க., கட்சி தலைமை அறிவித்திருந்தது. இதையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 100க்கும் மேற்பட்ட முக்கியஸ்தர்கள் உட்பட நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு ஆர்வமுடன் விருப்பமனு அளித்து வருகின்றனர்.