மேலும் செய்திகள்
திண்ணை பிரசாரம்
15-Sep-2025
திருக்கோவிலுார், : கள்ளக்குறிச்சி மாவட்ட ஜெ., பேரவை சார்பில் கீழத்தாழனுாரில் அ.தி.மு.க., சாதனைகள் குறித்த திண்ணை பிரசாரம் மற்றும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள், பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகள் குறித்து மக்களிடம் விளக்கும் வகையில், ரிஷிவந்தியம் தொகுதி, கீழத்தாழனுாரில் திண்ணைப் பிரசார மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தன. ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கினார். திருக்கோவிலுார் மேற்கு ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் கண்ணன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் சேகர், சந்தோஷ், பழனிச்சாமி, நகர செயலாளர் சுப்பு முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் குமரகுரு பங்கேற்று, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி உரையாற்றினார். எம்.எல்.ஏ., செந்தில்குமார், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி மாநில துணை செயலாளர் விநாயகமூர்த்தி, தொழிலதிபர் பிரபுசிவராஜ், ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன், முருகன், மாவட்ட நிர்வாகிகள் சுபாஷ், குரு, முருகதாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை வழங்கினர். மாவட்ட ஜெ., பேரவை இணை செயலாளர் அசோகன் நன்றி கூறினார்.
15-Sep-2025