உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஏ.கே.டி., கல்வி நிறுவனத்தில் விடுதி நாள் விழா

ஏ.கே.டி., கல்வி நிறுவனத்தில் விடுதி நாள் விழா

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., கல்வி நிறுவனங்களின் விடுதிநாள் விழா நடந்தது.கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி மாணவர் விடுதி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, கல்வி நிறுவனங்களின் தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் லட்சுமிபிரியா, நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். மாணவி ரூபிகா வரவேற்றார்.நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்கள் சர்புதீன், பாலு, நீலமங்கலம் ஊராட்சி வார்டு உறுப்பினர் சுரேஷ் பரிசு வழங்கினர். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.மேலும் பாட வாரியாக 100க்கு 100 மதிப்பெண் பெற்றுத்தந்த ஆசிரியர்களுக்கு கல்வி நிறுவனம் சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி