உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மதுபாட்டில் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். சங்கராபுரம் அடுத்த செல்லம்பட்டு கிராமத்தில் மதுபாட்டில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை செய்தனர். பஸ் நிறுத்தம் பின்புறம் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்த பூட்டை கிராமத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன்,45; என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ