உள்ளூர் செய்திகள்

சாராய ஊரல் அழிப்பு

கள்ளக்குறிச்சி: கரியாலுார் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் மதுவிலக்கு தொடர்பாக சோதனை மேற்கொண்டனர். அப்போது, சின்னபாலப்பூண்டி கிராம வனப்பகுதியில் ஒரு பிளாஸ்டிக் பேரலில் 200 லிட்டர் சாராய ஊரலும், 7 லிட்டர் சாராயமும் இருந்தது தெரிந்தது. உடன் போலீசார் சாராய ஊரலை தரையில் கொட்டி அழித்தனர். இதையடுத்து, சின்னபலாப்பூண்டி கிராமத்தை சேர்ந்த ஏழுமலை, 35; என்பவர் மீது கரியாலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை