உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கள்ளக்குறிச்சியில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் அப்பு தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் முத்துக்குமாரசாமி, துணைத்தலைவர்கள் அந்தோணிசாமி, தேவராஜ், மாவட்ட துணை தலைவர் ஆரியம்மமாள் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் பொன்னுசாமி பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியத்தொகை ரூ.6,750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில், நிர்வாகிகள் கமலா, சுப்பம்மாள், ராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை