மேலும் செய்திகள்
ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு
29-Oct-2024
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் துவக்கி வைத்தார்.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் கடந்த 28 ம் தேதி முதல் வரும் 31 ம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை நடந்த ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார். இதில் 100க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்று, விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக சென்று ஊழல் தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஊழல் தடுப்பு பிரிவு கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி.,சத்தியராஜ், இன்ஸ்பெக்டர் அருள்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
29-Oct-2024