தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் படிப்புக்கு விண்ணப்பம் வரவேற்பு
கள்ளக்குறிச்சி: தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் தலைப்பிலான ஓராண்டு சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் அகமதாபாத்துடன் இணைந்து தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் என்ற தலைப்பில் ஓராண்டு சான்றிதழ் படிப்பை தொடங்க உள்ளது.இ.டி.ஐ.ஐ., - அகமதாபாத் நிர்ணயிக்கும் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியை பேராசிரியர்கள் நேரடியாக நடத்துகின்றனர்.சென்னை, கிண்டியில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு நடக்கிறது. வகுப்புகள் வரும் அக்., 14ம் தேதி துவங்குகிறது. ஆண்டுக்கு 80 ஆயிரம் ரூபாய் கட்டணமாக அரசு நிர்ணயித்துள்ளது.இதில் 21 முதல் 40 வயதுக்குட்பட்ட இளம் பட்டதாரிகள் பயிற்சியில் சேர்ந்து பயனடையலாம். பயிற்சி முழுதும் குளிரூட்டப்பட்ட வகுப்பறைகளில் உயர்ந்த தரத்திற்கு நடத்தப்படுகிறது.மேலும் இது தொடர்பான அனைத்து விபரங்களையும் https://www.youtube.com/shorts/GBnEEtTQiul என்ற இணையதளத்தில் காணலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.