அரசு விருது பெற்ற புலவருக்கு கள்ளக்குறிச்சியில் பாராட்டு விழா
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தமிழக அரசின் தகமைசால் விருது பெற்ற புலவருக்கு பாராட்டு விழா நடந்தது.தமிழக அரசு சார்பில் திருக்குறள் நெறி பரப்பும் தகமைசால் விருது கள்ளக்குறிச்சியை சேர்ந்த புலவர் அய்யா மோகனுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு, அனைத்து துறை ஓய்வூதியம் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், வட்டார தலைவர் அன்பழகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் முத்துசாமி வரவேற்றார். சி சி.இ.ஓ., கார்த்திகா, மாநில தலைவர் சீதரன், பொது செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர் கோபால் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர். புலவர் அய்யா மோகன் ஏற்புரை வழங்கினார். டாக்டர் உதயகுமார், தமிழ் சங்க பொருப்பாளர்கள் மலரடியான், மதிவாணன், துரைமுருகன், சுப்ரமணியன், பள்ளி தலைமை ஆசிரியர் திருஞானசம்பந்தம், இன்ஸ்பெக்டர் ராபின்சன், மாவட்ட நுாலக அதிகாரி முத்துமணி, விழுப்புரம் அரசு போக்குவரத்து துறை மண்டல தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மாவட்ட செயலாளர் கேசவராமானுஜம் நன்றி கூறினார்.