மேலும் செய்திகள்
உதவித்தொகை வழங்கிய முன்னாள் மாணவர்கள்
18-Jun-2025
உளுந்துார்பேட்டை : ஐவதுகுடி ஸ்ரீ ஐயப்பா மற்றும் ஐயப்பா பாலிடெக்னிக் கல்லுாரியில் வாரிய தேர்வில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.இக்கல்லுாரியில் முதலாம் ஆண்டு மற்றும் நேரடியாக சேர்ந்த 2ம் ஆண்டு மாணவர்களுகான வகுப்பு துவக்க விழா மற்றும் வாரிய தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழாவும் நடந்தது.கல்லுாரி நிர்வாக அறங்காவலர் சரவணன் தலைமை தாங்கினார். ஐயப்பா பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். கல்லுாரி ஆலோசகர்கள் குமார், பாலகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினர். விழாவில், பாலிடெக்னிக் கல்லுாரிகள் அளவில் வாரிய தேர்வில் மாநில அளவில் சாதனை புரிந்த மாணவர்களையும் அதற்காக உழைத்த ஆசிரியர்களையும் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. ஸ்ரீ ஐயப்பா பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் புனிதவதி மோகன் நன்றி கூறினார்.
18-Jun-2025