மேலும் செய்திகள்
குளித்தலையில் தேசிய நுாலக வார விழா
20-Nov-2024
திருக்கோவிலுார் , : மணலுார்பேட்டை நுாலகத்தில் பயின்று போலீஸ் தேர்வில் பெற்ற இரண்டாம் நிலை காவலருக்கு பாராட்டு விழா நடந்தது.மணலுார்பேட்டை நுாலகத்தை பயன்படுத்தி, தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவிற்கு தேர்வு எழுதிய சந்தோஷ் இரண்டாம் நிலை காவலராக தேர்ச்சி பெற்றார். இவருக்கு நுாலக வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது.வாசகர் வட்ட குழு தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். வர்த்தகர் சங்க தலைவர் அம்மு ரவிச்சந்திரன், அறங்காவலர் குழு மாவட்ட தலைவர் பாலாஜி பூபதி, அரிமா சங்கத் தலைவர் சரவணன், முன்னாள் தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்ட பொருளாளர் சந்திர மோகன் வரவேற்றார்.அரிமா சங்கம் மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் காவலர் பணி ஆணை பெற்ற சந்தோஷை பாராட்டி, பொன்னாடை அணிவித்து, புத்தகங்களை பரிசாக வழங்கினார்.நிகழ்ச்சியில் அரிமா சங்க செயலாளர் பெருமாள், பேரூராட்சி உறுப்பினர் ரவி பங்கேற்றனர்.
20-Nov-2024