உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ராணுவ வீரர்களுக்கு பாராட்டு: சங்கராபுரத்தில் பேரணி

ராணுவ வீரர்களுக்கு பாராட்டு: சங்கராபுரத்தில் பேரணி

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் இந்திய ராணுவ வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்து நடந்த பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சங்கராபுரத்தில் அனைத்து பொது சேவை அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில், இந்திய ராணுவத்திற்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கும் வகையில் மாபெரும் பேரணி நடந்தது. இதில் ஒருங்கிணைப்பாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். பெட்ரோல், டீசல் கூட்டமைப்பு சங்க தலைவர் ஜெனார்த்தனன் பேரணியை துவக்கி வைத்தார். பொது சேவை ஒருங்கிணைப்பாளர் குசேலன் வரவேற்று, பேரணியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். இதில் பேரூராட்சி தலைவர் ரோஜா ரமணி, வியாபாரிகள் சங்க தலைவர் சக்ரவர்த்தி, நுகர்பொருள் சங்க தலைவர் சீனிவாசன், இன்னர் வீல் கிளப் தலைவர் சுபாஷினி, லியாகத் அலி, இதாயத்துல்லா, சாதிக், மோட்டார் வாகன சங்க தலைவர் விஜயகுமார், திருக்குறள் பேரவை லட்சுமிபதி, ஜெய்பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார், முன்னாள் ரோட்டரி தலைவர் சுதாகரன், சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப் மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட, 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடந்தது. துரைதாகப்பிள்ளை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி