/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் ரூ. 54.80 லட்சம் வர்த்தகம்
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் ரூ. 54.80 லட்சம் வர்த்தகம்
திருக்கோவிலுார்; அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் நேற்று 54.80 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டிக்கு நேற்று மக்காச்சோளம் 1000 மூட்டை, கம்பு 410 மூட்டை, 1000 மூட்டை நெல், தேங்காய் பருப்பு 5 மூட்டை என மொத்தம் 223.7 மெட்ரிக் டன் விவசாய விளை பொருட்கள் விற்பனைக்கு வந்திருந்தன. சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,259 ரூபாய்க்கும், நாட்டுக்கம்பு 2,790 ரூபாய், வீரிய ஒட்டு ரக கம்பு 2199 ரூபாய்க்கும் விற்பனையானது. இதன் மூலம் நேற்று ஒரே நாளில் 54.80 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.