மேலும் செய்திகள்
விழிப்புணர்வு பிரசாரம்
30-Oct-2024
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.சங்கராபுரம் பஸ் நிலையத்தில் வரும் 23, 24 தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடக்கிறது. இது தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு தாசில்தார் சசிகலா வழங்கினார்.கடைவீதியில் வியாபாரிகள், பொது மக்கள் மற்றும் நறிக்குறவர் காலனி மக்களிடம் வழங்கினார். தேர்தல் துணை தாசில்தார் மணிமாறன், வருவாய் ஆய்வாளர் திவ்யா, கிராம நிர்வாக அலுவலர் குமார் உடனிருந்தனர்.
30-Oct-2024