மேலும் செய்திகள்
இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
24-Oct-2024
கச்சிராயபாளையம்; மாதவச்சேரி அரசு உயர் நிலை பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரி கிராமத்தில் அரசு உயர் நிலை பள்ளி உள்ளது. இங்கு காவல் துறை சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் மாயக்கண்ணன் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் முருகேசன் வரவேற்றார். நிகழ்ச்சியில் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் மற்றும் உடல் நல பாதிப்புகள் குறித்தும், பெண்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபட்டால் வழங்கப்படும் தண்டனைகள் மற்றும் பெண்களை பாதுகாக்கும் சட்டங்கள் குறித்தும் மாணவர்களுக்கு காவல் துறை சார்பில் எடுத்து கூறப்பட்டது. ஆசிரியர் மாரியாப்பிள்ளை நன்றி கூறினார்.
24-Oct-2024