உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  பகுஜன் சமாஜ் கட்சி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

 பகுஜன் சமாஜ் கட்சி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புதிய புறநகர் பஸ் நிலையத்திற்கு அம்பேத்கர் பெயர் வைக்கக்கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மேற்கு மாவட்ட தலைவர் சிங்காரவேலன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் மணிவண்ணன், தொகுதி தலைவர்கள் ஈஸ்வரன், பிரகாஷ், அலுவலக செயலாளர் இளையராணி முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் திருமாறன், மண்டல ஒருங்கிணைப்பாளர் வினோதன், மாவட்ட தலைவர்கள் சின்னதுரை, பொன்னுரங்கன் விளக்கவுரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், கள்ளக்குறிச்சியில் புதிதாக அமைக்கப்படும் புறநகர் பஸ் நிலையத்திற்கு அம்பேத்கர் பெயர் வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ