உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தேசிய நெடுஞ்சாலையில் மூங்கிலால் தடுப்பு அமைப்பு

தேசிய நெடுஞ்சாலையில் மூங்கிலால் தடுப்பு அமைப்பு

உளுந்தூர்பேட்டை; உளுந்தூர்பேட்டை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரங்களில் மூங்கில் கழிகளை கொண்டு தடுப்பு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து பெருகியதால் நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்பட்டு வாகன போக்குவரத்து எளிதாக்கப்பட்டு வருகின்றது. அதற்கேற்ப வாகனங்களும் அதிகரித்ததோடு, அதி வேகத்தில் வாகனங்கள் செல்லும் போக்கும் அதிகரித்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன விபத்துக்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. வாகன விபத்துக்களை தடுக்க சாலை சந்திப்பு பகுதி, முக்கிய பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டன. வானங்கள் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதை தடுக்க சாலையோர வளைவு பகுதிகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் உளுந்தூர்பேட்டையில் இருந்து திருச்சி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வளைவு பகுதி, விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளில் சாலையோரம் இரும்பு தடுப்புகள் அமைப்பதற்கு பதிலாக மூங்கில் கழிகலாளான தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது.இதில் மூங்கில் கழிகளை 4 கழிகளை ஒன்றாக வைத்து இரும்பு ராடு கம்பிகளால் கட்டி தடுப்பு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மூங்கில் தடுப்புகள் இருப்பதை அறிந்து கொள்வதற்காக தடுப்பு கட்டையில் பிரதிபளிப்பான்களை தேசிய நெடுஞ்சாலை துறையினர் அமைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை