மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி ஸ்கூட்டர் வழங்கல்
13-Mar-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 630 மனுக்கள் பெறப்பட்டன.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு தலா ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்பீட்டில் பேட்டரி சக்கர நாற்காலியை கலெக்டர் வழங்கினார். டி.ஆர்.ஓ., ஜீவா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
13-Mar-2025