சைக்கிள் கடைக்காரர் அடித்து கொலை; தியாகதுருகத்தில் தந்தை, மகன் கைது
தியாகதுருகம்; தியாகதுருகத்தில் கழிவுநீர் தேங்கிய பிரச்னையில் சைக்கிள் கடைக்காரரை அடித்துக் கொலை செய்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.தியாகதுருகம் பேட்டைதெருவை சேர்ந்தவர் பச்சையப்பன்; 52; சைக்கிள் கடை நடத்தி வந்தார். இவருக்கு பிரிதிவிமங்கலம் கிராமம் விருகாவூர் சாலையில் வீடு உள்ளது. பக்கத்து வீட்டை சேர்ந்த பழனி,54; என்பவர் வீட்டு கழிவு நீர் பச்சையப்பன் வீட்டின் சுவரையொட்டி தேங்கியது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம், பழனி வீட்டில் இருந்து கழிவுநீர் வரும் குழாயை, சிமென்ட் வைத்து பச்சையப்பன் மூடினார். இதை தட்டிக்கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பழனி, அவரது மகன் பரணிதரன்,28; இருவரும் பச்சையப்பனை தாக்கி கீழே தள்ளியதில் நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்தார். உடனடியாக கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் பச்சையப்பன் இறந்தார்.இதுகுறித்து, பச்சையப்பன் மனைவி கலா கொடுத்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து பழனி, அவரது மகன் பரணிதரன் இருவரையும் கைது செய்தனர். இச்சம்பவம் தியாதுருகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.