உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இரு இடங்களில் பைக் திருட்டு : மர்ம நபருக்கு வலை

இரு இடங்களில் பைக் திருட்டு : மர்ம நபருக்கு வலை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பைக்குகளை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகினறனர். கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூர் காலனியை சேர்ந்த தங்கவேல் மகன் மதியழகன்,25; கடந்த 16 ம் தேதி இரவு 8 மணிக்கு பொற்படாக்குறிச்சியில் நிறுத்தி வைத்திருந்த அவரது பைக்கை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்:

உளுந்துார்பேட்டை அடுத்த சிக்காடை சேர்ந்தவர் ஏழுமலை,46; இவர் கடந்த மார்ச் 8 ம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். இந்நிலையில் வெளியே நிறுத்தி வைத்திருந்த இவரது பைக்கை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ