உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பைக்குகள் மோதல்; கொத்தனார் மரணம்

பைக்குகள் மோதல்; கொத்தனார் மரணம்

தியாகதுருகம்; தியாகதுருகம் அருகே பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் கொத்தனார் இறந்தார்.தியாகதுருகம் அடுத்த பானையங்கால் கிராமத்தைச் சேர்ந்த நடேசன் மகன் செல்வம், 29; கொத்தனார்.இவர் கடந்த ௩ம் தேதி இரவு 7:00 மணிக்கு சித்தலூரில் இருந்து தனது பைக்கில் பானையங்கால் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்திசையில் பெரியமாம்பட்டு காட்டுகொட்டகையைச் சேர்ந்த சக்திவேல் மகன் அரவிந்தன், 20; ஓட்டி வந்த பைக் செல்வம் மீது மோதியது. இவ்விபத்தில் படுகாயம் அடைந்த செல்வம் 108 ஆம்புலன்ஸில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி