உள்ளூர் செய்திகள்

பா.ஜ., ஊர்வலம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் பா.ஜ., சார்பில் வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்ற வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், வீடுகள் தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற பிரதமரின் கோரிக்கையை முன்வைத்து, பா.ஜ., சார்பில், திருக்கோவிலுாரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பஸ் நிலையத்தில் துவங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பா.ஜ., விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் கலிவரதன், மாவட்ட செயலாளர்கள் பத்ரி நாராயணன், ஹரிகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் ரவிச்சந்திரன், முகையூர் கிழக்கு ஒன்றிய தலைவர் ஞானாம்பிகை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை