உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பஹல்காமில் தாக்குதல் பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம்

பஹல்காமில் தாக்குதல் பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி, ; காஷ்மீர் பஹால்காமில் தீவிரவாத தாக்குதலை கண்டித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை கண்டித்தும், தீவிரவாத தாக்குதலை ஊக்குவித்து வழி நடத்திக் கொண்டிருக்கும் பாகிஸ்தானை கண்டித்தும், கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் அசோக்குமார், ஸ்ரீசந்த், செல்வநாயகம் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் மாவட்ட பார்வையாளர் ராஜ்குமார் பங்கேற்றார். ஒன்றிய தலைவர் முத்தையன் வரவேற்றார்.முன்னாள் மாவட்ட தலைவர் அருள், நிர்வாகிகள் மில் ஹரி, சதீஷ்குமார், ராஜேஷ், கண்ணன், வில்சன், மகேந்திரன், தியாகராஜன், ரவி, முருகன், செந்தில்குமார், ஜெயதுரை, பாண்டியராஜன், ஜோதிநாதன், கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தசாமி, மாலினி, முருகன், சிவசக்தி, வாசுகி, மலையம்மா, கிருஷ்ணவேணி, இந்தியன் துரைவேல், சர்தார், ஒன்றிய நிர்வாகிகள் வெங்கடேசன், ராமச்சந்திரன், நகர நிர்வாகி சத்யா உட்பட பலர் பங்கேற்றனர்.பாகிஸ்தானின் பயங்கரவாத செயலுக்கு கண்டனம் தெரிவித்தும், தீவிரவாத செயல்களை நிறுத்திக் கொள்ளாவிடில் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் இந்திய அரசின் நடவடிக்கை அனைத்திற்கும் கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ., உறுதுணையாக இருக்கும். தேச விரோத உள்நாட்டு விரோதிகளை முற்றிலுமாக களை எடுக்க வேண்டும் என கண்டன உரையில் தெரிவிக்கப்பட்டது.முத்து நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை