உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கோவில்களில் பா.ஜ., சிறப்பு வழிபாடு

கோவில்களில் பா.ஜ., சிறப்பு வழிபாடு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில், இந்திய ராணுவ வீரர்களின் நலனுக்காக, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், திருக்கோவிலுார், உலகளந்த பெருமாள் கோவில் மற்றும் வீரட்டானேஸ்வரர் கோவில்களில் , இந்திய ராணுவ வீரர்களின் நலன் வேண்டி சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.இதையொட்டி நேற்று நடந்த வழிபாட்டில், பா.ஜ., தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தர்மராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் கலிவரதன், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் புவனேஸ்வரி, நகர தலைவர் பத்ரி நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் வழிபாட்டில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி