மேலும் செய்திகள்
முதலாம் ஆண்டு துவக்க விழா
02-Jul-2025
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரி, விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் விழுப்புரம் ஜங்ஷன் அரிமா சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் நடந்த முகாமில், கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் வரவேற்றார். கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். கல்லுாரி செயலாளர் ஏழுமலை, பொருளாளர் சுப்ரமணியன், தாளாளர் பழனிராஜ், துணை தலைவர் முஸ்டாக் அகமது, அறக்கட்டளை உறுப்பினர்கள் குமார் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் மருத்துவக் கல்லுாரி மருத்துவ அலுவலர் பாக்கியரதி, சமூகப் பணியாளர் அசோக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் 45 யூனிட் ரத்தம் தானம் பெற்றனர். விழுப்புரம் ஜங்ஷன் அரிமா சங்க தலைவர் தினகரன், மண்டல தலைவர் அய்யப்பன், ஆலோசகர் அபிராமன், மாவட்ட தலைவர்கள் கார்த்திகேயன், அரவிந்தகுமார், ரவிச்சந்திரன், கல்லுாரி லியோ சங்க தலைவர் தென்னரசு முகாமிற்கான ஏற்பாடுகளை செய்தனர். லியோ சங்க திட்ட அலுவலர் ராமராஜன், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரி துணை முதல்வர் மீனாட்சி நன்றி கூறினார்.
02-Jul-2025