ரோட்டரி சங்கம் சார்பில் ரத்த தான முகாம்
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம், ஏ.கே.டி., நினைவு பொறியியல் கல்லுாரி, மலைக்கோட்டாலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ரத்த தான முகாம் நேற்று நடந்தது. ரோட்டரி சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு செந்தில்குமார், மண்டல துணை ஆளுநர் மூர்த்தி முன்னிலை வகித்தனர். செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரி முதல்வர் சிவக்குமார், கல்லுாரி துறை தலைவர் மணிகண்டன், அரசு மருத்துவக்கல்லுாரி ரத்த வங்கி மருத்துவ அலுவலர் விஜயகுமார், மேலுார் வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி, மலைக்கோட்டாலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஜெகதீஸ்வரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, ரோட்டரி முன்னாள் தலைவர் இமானுவேல் சசிக்குமார், முன்னாள் செயலாளர் பாண்டியன் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். முகாமில் 50 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. ரோட்டரி சங்க பொருளாளர் முருகன் நன்றி கூறினார்.