உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பஸ் நிலையத்தில் வாலிபர் சடலம்; போலீஸ் விசாரணை

பஸ் நிலையத்தில் வாலிபர் சடலம்; போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இறந்து கிடந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு, 30 வயது மதிக்க தக்க வாலிபர் இறந்து கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரித்தபோது, இறந்தவர் கள்ளக்குறிச்சி அடுத்த மாடூரை சேர்ந்த கணேசன் மகன் ராஜேஷ்குமார், 31; தனியார் காப்பீட்டு நிறுவன ஏஜன்ட் என தெரியவந்தது. ராஜேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை