மேலும் செய்திகள்
ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா
15-Jul-2025
திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரோட்டரி சங்கம் சார்பில் தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு தாய்மார்களுக்கு பேபி கிட் வழங்கப்பட்டது. திருக்கோவிலுார் ரோட்டரி சங்கம் சார்பில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது. ரோட்டரி சங்கத் தலைவர் கோதம்சந்த் தலைமை தாங்கி, குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பேபி கிட் வழங்கினார். முன்னாள் தலைவர் செந்தில்குமார், சங்க செயலாளர் ராஜேஷ் குமார் முன்னிலை வகித்தனர். சங்க பொருளாளர் காமராஜ் வரவேற்றார். மருத்துவமனை பொறுப்பு அலுவலர் ராஜவிநாயகம் உள்ளிட்ட டாக்டர்கள் கலந்து கொண்டு தாய்ப்பாலின் அவசியம் குறித்த கூறினர். சாசன தலைவர் வாசன், தொழிலதிபர் சக்தி, முன்னாள் ராணுவ வீரர் கல்யாண்குமார், உறுப்பினர்கள் முத்துக்குமாரசாமி, வசந்த், பாலாஜி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
15-Jul-2025